Skip to content
Centre for War Victims and Human Rights
Centre for War Victims and Human Rights

Protecting War Victims and Promoting Human Rights

  • Vision & Mission
  • Our Teams
  • Contact Us
  • FAQ
  • Support Us
Centre for War Victims and Human Rights
Centre for War Victims and Human Rights

Protecting War Victims and Promoting Human Rights

யுத்தம் குறித்த அனைத்து ஆவணங்களையும் ஆராயவுள்ள ஜனாதிபதியின் நிபுணர் குழு தருஷ்மன் அறிக்கையும் உள்­ளிட்ட

Posted on September 27, 2023September 27, 2023 By Admin

இலங்கை மனித உரிமை விவ­காரம் குறித்த தருஷ்மன் குழுவின் அறிக்கை உள்­ளிட்ட யுத்தம் தொடர்­பான அனைத்து பொது ஆவ­ணங்­க­ளையும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள சர்­வ­தேச நிபுணர் குழு ஆரா­ய­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முரண்­பா­டுகள் நில­வு­கின்ற  விட­யங்கள்  குறித்து அர­சாங்­கத்­தி­டமும்  இரா­ணு­வத்­தி­டமும்  விளக்­கங்­களை கோருவோம் எனவும் சர்­வ­தேச  நிபுணர் குழுவின் உறுப்­பி­னர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்.

இலங்­கையின்  இறுதிக்  கட்ட  யுத்தம்  தொடர்­பாக  ஐக்­கிய   நாடுகள்  செய­லாளர்  நாயகம்  பான்  கீ  மூனுக்கு  ஆலோ­சனை   வழங்­கு­வ­தற்கு  நிய­மிக்­கப்­பட்ட  தருஷ்மன்  தலை­மை­யி­லான  நிபுணர்  குழுவின்  அறிக்­கையை  சர்­வ­தேச  நிபுணர்  குழு  விரி­வாக  ஆரா­ய­வுள்­ள­தாக  நிபுணர்  குழுவின்  உறுப்­பி­னர்­களில்  ஒரு­வ­ரான  சேர்  ஜெப்ரி  நைஸ்  ஊடகம்  ஒன்­றுக்கு  தெரி­வித்­துள்ளார்.

யுத்தக் குற்றம் தொடர்­பாக விசா­ரிப்­ப­தற்கு உள்­ளக ரீதியில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஆணைக்­கு­ழு­வுக்கு ஆலோ­சனை வழங்­கு­மாறு  நாங்கள் கேட்­கப்­பட்­டுள்ளோம் என்றும் அவர் கூறி­யுள்ளார். யுத்தம் தொடர்­பான அனைத்து பொது ஆவ­ணங்­க­ளையும்  நாங்கள் ஆரா­ய­வுள்ளோம். முரண்­பா­டுகள் நில­வு­கின்ற விட­யங்கள் குறித்து அர­சாங்­கத்­தி­டமும் இரா­ணு­வத்­தி­டமும் விளக்­கங்­களை கோருவோம் என்றும் சேர் ஜெப்ரி நைஸ் கூறி­யுள்ளார். இதே­வேளை இலங்­கையின்  சிவில் யுத்தம் குறித்தும்  அதன்  சவால்கள்  மற்றும் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பா­கவும் தான் நன்கு அறிந்­துள்­ள­தாக சர்­வ­தேச நிபுணர் குழுவின் மற்­று­மொரு உறுப்­பி­ன­ரான  பேரா­சி­ரியர் டேவிட் கிரேன் குறிப்­பிட்­டுள்ளார். அந்­த­வ­கையில் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து தற்­போது  பொது­வான முறையில் முன்­வைக்கப்­பட்­டுள்ள அனைத்து ஆவ­ணங்­க­ளையும் தான் ஆரா­ய­வுள்­ள­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.

”திறந்த மன­துடன் இந்த நட­வ­டிக்­கை­கையை முன்­னெ­டுக்க  நான்  வந்­துள்ளேன். அந்­த­வ­கையில் உள்­ளக ஆலோ­சனைக் குழு­வுக்கு  எனது சட்ட ஆலோ­ச­னை­களை வழங்­கவுள்ளேன்” என்று பேரா­சி­ரியர் டேவிட் கிரேன் குறிப்­பிட்­டுள்ளார்.சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்ற விசா­ர­ணை­களில் அனு­பவம் மிக்க மூன்று அதி­கா­ரிகள்  காணாமல் போனோர் தொடர்­பாக விசா­ரிக்கும் ஆணைக்­கு­ழு­வுக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ  கடந்­த­வாரம் அறி­வித்தார். இந்தக் குழு­வுக்கு  சேர்  டெஸ்மன்  டி  சில்வா தலைமை தாங்­கு­கின்றார். இவ­ருடன்  சேர்  ஜெப்ரி  நைஸ்  மற்றும் டேவிட் க்ரேய்ன் ஆகியோர் இடம்­பெ­று­கின்­றனர். ஆணைக்­கு­ழு­வுக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக மூவர் கொண்ட குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­துடன் காணா­மற்­போனோர் தொடர்­பான முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின்  ஆணை பரப்­பையும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்‌ஷ விரி­வு­ப­டுத்­தி­யுள்ளார்.

அதா­வது யுத்த காலத்தில் இழைக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் சர்­வ­தேச மனி­தா­பிமான சட்­ட­திட்­டங்­களை ஆராய்ந்து அறிக்கை  சமர்ப்­பிப்­ப­தற்­கு­ரிய பொறுப்பு இந்த குழு­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. அந்­த­வ­கை­யி­லேயே இதன் ஆணை விரி­வாக் கம் செய்­யப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் தேவைப்­படும் போது மேலும் ஆணைக்­கு­ழு­வுக்கு நிபு­ணர்கள் நிய­மிக்­கப்­ப­டலாம் என்றும் ஜனா­தி­பதி பேச்­சாளர் அலு­வ­லகம் குறிப்­பிட்­டுள்­ளது. தற்­போது நிய­மிக்­கப்­பட்­டுள்ள சர்­வ­தேச  நிபுணர் குழுவுக்கு ஆயுத மோதல்கள் தொடர்­பான சட்­டங்கள்  குறித்த நிபு­ண­ரான சேர் டெஸ்மன்ட் டி. சில்வா தலைமை தாங்­கு­கின்றார்.  அத்­துடன் நிபுணர் குழுவில் இடம்­பெ­று­கின்ற மற்­று­மொரு உறுப்­பி­ன­ரான சேர் ஜெப்றி நைஸ் லண்­டனில் சர்­வ­தேச சட்­ட­திட்டங்கள் குறித்த பேரா­சி­ரி­ய­ராக உள்ளார். மேலும் மூன்­றா­வது  உறுப்­பி­ன­ரான பேரா­சி­ரியர் டேவிட் கிரேன் சிரா லியோன் தொடர்­பான விசேட நீதி­மன்­றத்தில் பிர­தான பதவி ஒன்றில் ஐக்­கிய நாடு­களின் முன்னாள் செய­லாளர் நாய­கத்­தினால் தனிப்­பட்ட  ரீதியில்  நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார்.

Uncategorized

Post navigation

Previous post
Next post

Related Posts

Government reverses policy on War Crimes Probe in Secret, says UNP

Posted on September 27, 2023September 27, 2023

The main opposition United National Party has accused the Government of a stealthy reversal of its policy on probing alleged war crimes by surreptitiously taking steps to launch a domestic investigation using foreign expert advisors in the face of mounting international pressure. Issuing a statement yesterday, the UNP, which previously…

Read More

War Crimes in Sri Lanka – A Report by International Crisis Group on 17th May 2010

Posted on September 27, 2023

The Sri Lankan security forces and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) repeatedly violated international humanitarian law during the last five months of their 30-year civil war. Although both sides committed atrocities throughout the many years of conflict, the scale and nature of violations particularly worsened from January 2009…

Read More

Conference on International Protection of Human Rights in the 21st Century – Case Study on Sri Lanka

Posted on September 27, 2023September 27, 2023

Conference Review Feb 22,2012 Conference on International Protection of Human Rights in the 21st Century – Case Study on Sri Lanka organized by Center for War Victims and Human Rights was held on Feb 21, 2012 at Pearson Conference Center, Toronto, Canada. Bracing the cold weather academics, lawyers, activists, MPs, and the…

Read More

Leave a Reply

You must be logged in to post a comment.

Follow Us

  • Twitter
  • Facebook
  • YouTube

Recent Posts

  • War Crimes in Sri Lanka – INTERNATIONAL CRISIS GROUP – NEW REPORT
  • Sri Lanka: New Evidence of Wartime Abuses – Human Right Watch
  • CWVHR welcomes UN Appointed Panel on Sri Lankan Human Rights Abuses – June 23,2010
  • Human Rights Day 2010
  • UN Report on Sri Lanka Conflict must be made Public – Amnesty International

Archives

  • October 2023
  • September 2023

Useful Links

  • British Institute of Human Rights
  • Amnesty International
  • Human Rights Watch
  • Asian Human Rights Commission
  • No Borders

Information Collection

Click on the Country below to get more details.

  • Australia
  • Belgium
  • Canada
  • Denmark
  • France
  • Germany
  • Italy
  • Netherlands
  • New Zealand
  • Norway
  • Sweden
  • Switzerland

If you live in a country not listed above, please contact us by email at dm@cwvhr.org or call us at 1-416-628-1408.

©2026 Centre for War Victims and Human Rights | WordPress Designed & Maintained by Rohan Rethna